தென் திசையில்…


தென் திசையில் என் பயணம் தொடர்கிறது. கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற சோழ நாடு எவ்வளவு அழகாய் இருக்கும்! வழியில் ஒரு இடத்தில் ஏதோ பெருங்கூட்டம். அதற்குக் காரணம் ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு வேதாந்தி எல்லா தெய்வங்களிலும் சிறந்தவர் சிவனா திருமாலா அல்லது பிரம்மனா என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது தான். சண்டைக்காரர்கள் மூவரில் ‘கட்டையாயும் குட்டையாயும்’ கையில் குறுந்தடிமாய்க் காட்டியளித்த அந்த வைணவர் சுவாரசியமானவர். அவரிடம் ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு’ என்று கொஞ்சம் விளையாடினேன். அதற்குள்ளாக அங்கு ஒரு சிவிகை வந்தது. அதில் இருந்த பெண் அழகி தான். ஆனால் ஏனோ அவள் முகத்தில் ஒரு கோர வடிவம் தெரிந்ததாக உணர்ந்தேன். அவள் திடீரென்று ‘கிறீச்’ என்று அலறியதும் அவள் பார்த்துக் கொண்டிருந்த திசையில் திரும்பினேன். அந்த வைணவப் பெரியவர் தெரிந்தார். என்ன வியப்பு… அவர் முகமும் அதே கோர வடிவமாய்க் காட்சியளிக்கிறது. ஒரே மர்மமாக இருக்கிறது.

Advertisements