ஆங்கில மோகம்


பலசரக்கு அங்காடியில் நுழைகிறேன். ஆடம்பரத் தம்பதியர் தம் குழந்தையின் ஆங்கில மய மழலையில் பெருமிதம் கொள்கின்றனர். அம்புலிமாமா படித்த காலம் போய் ஹாரி போட்டெர் காலம் வந்து விட்டது.

கலப்பு

கலப்பு

ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் பெயர் சொல்லேன் என்று இன்றைய இளைஞனைக் கேட்டால் பெரும்பாலும் மௌனமோ அல்லது ஏளனமோ தான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். காசு கொடுக்கும் கணிப்பொறி மொழிகளை விடுத்து கனித்தமிழ் படிக்க நேரமில்லை.

பெயர்கள், பெயர்பலகைகள், அன்றாட உரையாடல்கள் என்று அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு, திணிப்பு, அல்லது மிதப்பு. வானொலி மற்றும் தொலைகாட்சி அறிவிப்பாளர்களின் தமிழ் மொழிப் படுகொலையின் உச்ச கட்டம். ஒரு நிமிடம் தடையின்றி தமிழ் பேசினாலே தங்கம் தரும் அளவுக்குத் தமிழ் வளர்ந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரை படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். பாடல்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் பத்திரிகைகள் தங்களால் முடிந்த வரைக்கும் தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் மட்டும் நல்ல தமிழை நம்பி போராடிக் கொண்டிருக்கின்றன.

நல்ல தமிழ் கேட்க யாழ்பாணம் அல்லது மலேசியா செல்ல வேண்டியுள்ளது. வாழ்க தமிழ்.

4 comments on “ஆங்கில மோகம்

 1. உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நானும் பலமுறை இது போன்ற விஷயங்களைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நான் சமீபத்தில் இந்திய வந்த போது கூட, நான் ஆங்கிலமே பேசவில்லை என்று எனது நண்பன் வருத்தப்பட்டான். இரண்டரை ஆண்டு காலம் தமிழ் பேச ஆள் கிடைக்காதா என்று என்னுடைய அலைபேசியில் எண்களைத் தேடிக்கொண்டிருந்தேன். இப்போது தமிழகத்தில் தமிழ் பேசுவோமே என்று பெருமையாய்ப் பேசினால் எனக்குக் கிடைத்த வரவேற்பு இதுதான். மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொல்லிய கவிஞன் சரியல்ல என்று விகடனில் வாதங்கள் படித்தேன். இருப்பினும், உயிரோடு இருப்பினும், தமிழ் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கு அடையாளம் தெரியாமல் மாறிவிடக் கூடும்.

  Like

 2. nanba unathu valaipoovai the hindu tamillil parthu padithu kondirukkeren. miga iyalbaga arumaiyaga eluthgirai valthukkal. un palaiya pathivugal padikka padikka viruviruppu nagai’chuvaiyai eluthi manathai vaseekarikkirai. aangilathil thamizhai eluthigren ena thavaraga ennathe enathu ganini atharkku thunai puriyavillai. poruthu kol. un inaiya pani inba pani thodara valthukal.

  Like

  • நன்றி. Tamil transliteration பயன்படுத்தி அல்லது தமிழ் எழுத்துருக்களைத் (fonts) தரவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்ய முயற்சியுங்கள்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s