யாருமற்ற ஓர் நாளில்…


எதிர் வீட்டில் அலறும் தொலைகாட்சி, அதில் கத்திப் பேசும் பேச்சாளர்கள், பாடுகிறேன் பேர்வழி என்று படுத்துபவர்கள், திரை வாய்ப்பின்றி சின்னத் திரையில் நடுவராகி மகிழ்ந்து கொள்ளும் முன்னாள் நடிகர்கள், வயதுக்கு மீறிய அறிவைக் காட்டத் துடிக்கும் சிறுவர் மற்றும் சிறுமியர் என்று ஒரு பெரிய கூட்டமே என்னைக் கொல்லத் தயாராக இருக்கிறது.

கீழ் வீட்டில் முழுகாமல் இருக்கும் பெண். அவள் காலில் அணிந்திருப்பது கொலுசா சலங்கையா அல்லது சில்லறை காசு மாலையா என்று தெரியாது. அனால் அவள் அதிகம் நடக்கிறாள் என்று மட்டும் தெரியும். எதிர் வீட்டுப் பெண்ணை அவள் கீழே இருந்தபடியே கூப்பிடும் போது ஊரே அதிரும். இவள் இங்கிருந்தபடியே அவளிடம் பேசும் போது பூகம்பத்தின் பின்னதிர்வைப் போலிருக்கும்.

இதில் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி வேறு. எதிலோ எதையோ போட்டு நங் நங் என்று இடித்துக் கொண்டிருப்பாள். அவசரமாகக் கட்டப்பட்ட எங்கள் குடியிருப்பே சற்று ஆட்டம் காண்பது போலிருக்கும். அவள் மகன் செல்பேசியை எடுத்தான் என்றால் நம் காது கிழியாமல் வைக்க மாட்டான். ஏறக்குறைய ஒரு மன நல மையத்தின் சூழல்.

இரைச்சல் உலகம்

இவர்களை எல்லாம் நாடு கடத்தினால் என்ன? பலமுறை யோசித்தும் அதற்கான வழிமுறை தெரியாத போது தான் என்ன ஆனதோ தெரியவில்லை, எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் எங்கோ போய் விட்டனர்.

‘அப்படா! இன்றைக்கு நிம்மதி. இறைவனுக்கு நன்றி’.

இரைச்சலை விட நிசப்தம் கொடியது போலும். பழகிய சத்தங்களைக் கேட்காமல் செவிகளில் ஏதோ ஒருவித வெற்றிடம் உருவானதைப் போன்ற உணர்வு.

அப்போது தான் நினைத்துப் பார்த்தேன்.

எல்லோரும் நம்மைப் போலவே இருந்து விட்டால்?

இந்த உலகம் வெறுமையில் இறந்து விடும். சிரிப்புகள், சத்தங்கள், வேடிக்கைகள், கூச்சல்கள், குடிகாரர்களின் உளறல்கள், தெரு நாய்களின் குரைத்தல்கள், தொட்டி நிறைந்து வழியும் தண்ணீர், அதை நிறுத்த விரையும் சிறுமி, தூரத்து ரயில் சத்தம், பதினாலு வினாடியில் ஆடித் தள்ளுபடி விவரிக்கும் விளம்பரம், பழைய வானொலிப் பெட்டியின் இரைச்சல், நூறாவது முறை பார்க்கும்போதும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, அதன் விளைவு, இன்னும் எத்தனையோ…

இவை எல்லாவற்றையும் இழக்கிறேன். மயான அமைதியில் மனம் குமுறுகிறது.

இரைச்சல்கள் இருந்து விட்டுப் போகட்டும். இல்லையேல் நாம் பலவற்றை இழக்க நேரிடும்.

இரைச்சல்களும் இசையே

இரைச்சல்களும் இசையே

சத்தங்களை நேசிப்போம். பூமிக்கு வெளியிலிருந்து பார்போருக்கு அது ஒருவித இசையாகக் கூட கேட்கலாம்.

சத்தங்களை நேசிப்போம்.

One comment on “யாருமற்ற ஓர் நாளில்…

  1. விஜய்,
    உன்னுடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உவமைகளைத் தேடி அலையாமல் சொல்ல வந்த்தை சொல்லி விடுகிறேன். உன்னுடைய எழுத்து ஏதோ ஒரு இணைய தளத்தில் புதைந்து விடக் கூடாது. வெகுஜனப் பத்திரிகைகளுக்கு உன்னுடைய படைப்புகளை அனுப்பு, தயவு செய்து. உனக்கு இவை சாதாரணமாகப் படலாம். ஆனந்த விகடன், குமுதம் இவற்றில் வரும் எழுத்துக்கு உன்னுடையது எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. ஆரம்பத்தில் சில திருப்பி அனுப்பப் படலாம்… ஆனால் அங்கீகாரம் கிடைத்தே தீரும்.

    என்னுடைய நண்பர் ஒருவர், வங்காளத்துக்காரர். அவர் இங்கு வந்த சில நாட்கள் ஒரு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கல்கத்தாவின் சத்ததிற்குப் பழக்கப்பட்ட அவருக்கு அந்த மாளிகை அமைதி மயானம் போல் இருந்த்தது. சில நாட்களில் அவர் நிறைய மதுக் கடைகள் மற்றும் இரவு விடுதிகள் அதிகம் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்றார்.. அந்த ஓய்வில்லா இரைச்சல் கேட்டபின்பு, கல்கத்தாவுக்கே திரும்பி சென்று விட்டதாக மன நிறைவு கொண்டார்!!!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s