இலக்யா குறுக்கெழுத்து 25


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)

6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)

7. நீங்களும் நானும் பார்க்க (2,2)

11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)

13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)

16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)

17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே! (1, 4)

 

வலமிருந்து இடம்

10. பழங்காலத் தமிழ் முகம் (4)

மேலிருந்து கீழ்

2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)

3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1, 3)

4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)

5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)

7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)

8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை? (3)

9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்? (5)

12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)

14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)

15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)

 

xwrd25

2 comments on “இலக்யா குறுக்கெழுத்து 25

  1. கு. 1. காதல் கதை 6. மாலைக்கண் 7. நாம் காண
    10. வதனம் 11. கம்பளி 13. வில்வம் 16. தற்காப்பு 17. கை
    வீசம்மா

    நெ. 2. தன்மையான 3. தை மாதம் 4. முக்கோணம் 5. பண்பு 7. நாவல்
    8. காகம் 9. தவிக்காதே 12. பணபலம் 14. 15. மதகு

    3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1,
    4) ==> (1,3)?

    நன்றி.
    முத்து

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s